Whatsapp Group Ethics

ஏதாவதொரு WhatsApp குழுமமொன்றில் (Whatsapp Group) நீங்களும் ஒரு அங்கத்தவரா?

இன்று Whatsapp செயலியை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்னும் அளவுக்கு அனைவருமே whatsapp யை பயன்படுத்துகின்றோம். எனவே, அதன் ஒரு பகுதியாக பல whatsapp குழுமங்களில் நாம் அங்கத்தவர்களாக இருக்கின்றோம் அல்லது சிலவேளை அந்த குழுமத்திற்குறிய admin ஆகவும் இருக்கலாம்.

எனினும், அவ்வாறான குழுமங்களிலே நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற நெறிமுறைகள் குறித்த தெளிவு அல்லது அது தொடர்பான கரிசனையற்றவர்களாகவே அதிகமானவர்கள்
காணப்படுகின்றார்கள்.

எனவே WhatsApp குழுமமொன்றில் நீங்களும் ஒரு அங்கத்தவராக இருந்தால் பின்வரும் நெறிமுறைகளை அவசியம் கடைப்பிடியுங்கள். அது உங்களின் தரத்தையும் உங்களைப்பற்றிய நல்லெண்ணத்தையும் அதிகரிக்கும்.

WhatsApp குழுமமொன்றில் (Whatsapp Group) நீங்களும் ஒரு அங்கத்தவரா? அப்படியாயின் நீங்கள் அவசியம் அறிந்துவைத்திருக்க வேண்டியவை

  • குறித்த Whatsapp குழுவானது எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். குழுவின் நோக்கத்திற்கு பொருத்தமற்ற செய்திகளைப் பகிர வேண்டாம்.
  • உங்களுக்கு ஆர்வமான அல்லது விருப்பமான ஒரு விடயம் தொடர்பாக அதிகமாக பகிர்ந்து குழுவை Spam செய்ய வேண்டாம். நகைச்சுவை, விளம்பரங்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள விரும்பினால் விரும்பினால், அந்த நோக்கத்திற்காக whatsapp group ஒன்றை அமைத்து மற்றவர்களை அனுமதியுடன் அதில் இணைக்கலாம்.
  • மற்றவர்கள் குழுவைவிட்டு வெளியேற அவர்களுக்கு பூரண உரிமையுண்டு என்பதை நினைவில் வைத்திருங்கள்.
  • நீங்கள் ஒரு குழுவை விட்டு வெளியேறுவதாக இருந்தால் பொருத்தமான காரணத்தை தெரிவித்து வெளியேறலாம்.
  • தொடர்ச்சியான செய்தியாக இருந்தால், உங்கள் செய்தியை ஒரே ஒரு Chat யில் இடுங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் வாக்கியத்தையும் புதிய புதிய chat யில் பதிவிடுவதை தவிருங்கள்.
  • குறித்த குழுவின் நோக்கத்திற்கு பொருத்தமான மட்டுப்படுத்தப்பட்டளவு அங்கத்தவர்கள் குழுவில் இருப்பது எல்லா வழிகளிலும் இலகுவானதும் நன்மையானதுமாகும். அவ்வாறில்லாவிட்டால் அங்கத்தவர்களின் பொருத்தப்பாடு அல்லது குழுவினூடான எதிர்பார்ப்புக்கள் வேறுபட்டதாக இருக்கும்.
  • அறிவுகமற்ற குழுக்களிலே பெரியவர்களுடன் சிறுவர்களை இணைக்க வேண்டாம். எந்தவொரு பெற்றோரும். தங்கள் குழந்தைகள், அறிமுகமற்றவர்களுடன் தொடர்பாடுவதை விரும்புவதில்லை.
  • குழுவில் தனிப்பட்ட இருவருக்கிடையே உரையாடல் தொடர்ந்தால், குழுவிலே உரையாடல் தனிப்பட்ட நபருடன் private message ஊடாக தொடர்புகொள்ளுங்கள். அதற்காக குழுவை பயன்படுத்த வேண்டாம்.
WhatsApp Image 2021 03 11 at 4.12.37 PM
How to reply privately to any message received in WhatsApp Group

நீங்கள் இருக்கின்ற குழுக்களிலும் இதனை பகிர்ந்து தெளிவூட்டுங்கள்

  • முடிந்தவரை மிக அவசியம் தவிர்ந்த சந்தர்ப்பங்களில் இரவு 09.00 மணி தொடக்கம் காலை 07.00 மணி வரை பதிவுகளை இடுவதை தவிருங்கள்.
  • குழுவிலே, யாராவது ஒரு கேள்வியைக் கேட்டால், உங்களுக்கு பதில் தெரியாது என்றால் “எனக்குத் தெரியாது” என்று பதிலளிக்க வேண்டாம். பதில் தெரிந்த ஒருவர் பதிலளிப்பதற்காக காத்திருங்கள்.
  • முடிந்தவரை acknowledgement (நன்றி) என்று குழுவிலே பதிவிடுவதை தவிருங்கள். குழுவிலே எல்லோரும் நன்றி சொல்ல ஆரம்பித்தால் அது ஏனையோருக்கு அசௌகாரியங்களை ஏற்படுத்தும். அவ்வாறு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் reply privately என்ற option ஊடாக தனிப்பட்ட முறையிலே உரியவருக்கு நன்றி சொல்லுங்கள்.
  • ஒருவர் தனிப்பட்ட கேள்வியைக் கேட்டால் (ஆலோசனை கேட்பது போன்றத) வேறு யாராவது ஏற்கனவே பதிலளித்திருந்தால் பதிலளிக்க வேண்டாம். இல்லையெனில் அந்த நபருக்கு தனிப்பட்ட செய்தியில் நேரடியாக பதிலளிக்கவும்.
  • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அரசியல் ரீதியான ஆர்வம் காணப்படலாம். எனவே, குழுவிலே அரசியல் சார்ந்த விடயங்களை பகிர்ந்துகொள்வதை முழுமையாக தவிர்ந்துகொள்ளுங்கள்.
  • மேலும், ஒரு தகவலை பகிர்வதற்கு முன் தகவலை முழுமையாக உறுதிப்படுத்திய பின் பகிரவும். மேலும், தகவலை பகிர்ந்த பின்னர், அது உங்களால் பகிரப்பட்ட தகவல் என்பதை நினைவில் வையுங்கள். பிழையான தகவலை பகிர்ந்த பின்னர், அது வேறுறொவர் உங்களோடு பகிர்ந்த தகவல் என பொறுப்பேற்காமல் விடுவதைவிட, உறுதிப்படுத்தமுடியாத தகவல்களை பகிர்ந்துகொள்வதை முற்றாக தவிருங்கள்.
  • குழுவிலே, தனிப்பட்ட ஒருவர் தொடர்பாக அல்லது அவரை விழித்து எதிர்மறையான கருத்துக்களையோ விமர்சனங்களையோ தெரிவிக்க வேண்டாம். குறித்த ஒருவர் தொடர்பாக உங்களிடம் கருத்து இருந்தால், குறித்தவருடம் தனிப்பட்ட message ஊடாக சம்பந்தப்பட்ட நபருடன் ஒன்றில் உரையாடுங்கள்.
  • நெருக்கமான அல்லது குடும்ப உறவுகள் சார்ந்த குழுமங்களிலே அவ்வாறல்லாதவர்களை இணைக்க வேண்டாம்.
  • குழுவிலே ஒருவரை இணைக்க முன்பு அவரை இணைக்கலாம் என்ற அவரின் விருப்பத்தை எப்போதும் கேளுங்கள்.
  • Data வை வீணடிக்கின்ற அவசியமற்ற பதிவுகளை தவிருங்கள். குறிப்பாக video பதிவுகளை பகிர்வதாக இருந்தால், அவசியமாக குறித்த video தொடர்பான ஒரு சிறிய caption (அதாவது குறித்த வீடியோ எது தொடர்பானது) என்ற தகவலையும் சேர்த்தே பதிவிடுங்கள். ஆர்வமுள்ளவர்கள் மட்டும் அதனை open செய்து பார்வையிடுவார்கள்.
  • தற்காலிகமான குழுவாக இருந்தால், குழு அதன் நோக்கத்தை நிறைவேற்றியதும் அக்குழுமத்தை delete செய்துவிடுங்கள்.
  • நீங்கள் குழுவிலே ஒரு உரையாடலை தொடர்ந்தால், அதனை சிறந்தமுறையிலே முடித்துவையுங்கள்.

மேற்சொன்ன சிறிய விடயங்களை நாம் அங்கத்துவம் பகிக்கின்ற Whatsapp குழுமங்களிலே கடைப்பிடிக்கின்றபொழுது குறித்த குழுமமானது பிரயோசனமானதாகவும், எல்லோருக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்கும்.

எனவே, இத்தகவலை ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். அது, குறித்த விடயம் தொடர்பாக எல்லோரும் நல்லமுறையிலே செயற்படுத்த உதவும்.

pexels andrea piacquadio 3761509
Sharing is Caring

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here