How much data does zoom use

Zoom Meeting எவ்வளவு data வை பயன்படுத்துகிறது மற்றும் data விரயத்தை எவ்வாறு தவிர்ப்பது ? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

Zoom meeting ஆனது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

பாடசாலை முதல், அலுவலகங்கள் வரை எல்லா வகையான தொடர்பாடல்களுக்கும்  Zoom Video Conferencing பாவனையானது இன்றைய COVID19 சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறியுள்ளது.

எனவே, இவ்வாறு Zoom யை உபயோகப்படுத்தும் போது, எவ்வளது data எமக்கு தேவைப்படுகின்றது, எவ்வாறு தடங்களில்லாமல் பாடசாலை மாணவர்களாயின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது? அதேபோல, அலுவலக ரீதியான தொடர்பாடல்களை மேற்கொள்வது போன்ற அறிவூட்டல்கள் அவசியமானது.

எனவே, இப்பதிவினூடாக Zoom Meeting ஆனது எவ்வளவு data வை பயன்படுத்துகிறது மற்றும் எவ்வாறு data விரயத்தை தவிர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி அறிந்துகொள்வோம்.

Zoom Meeting ஆனது எவ்வளவு data வை பயன்படுத்துகிறது?

குறிப்பு: இணையப்பாவனையின் போது Bandwidth மற்றும் throughput என்ற இரண்டு விடயங்கள் காணப்படுகின்றது. அவை தொடர்பாக ஒரு சிறிய விளக்கம் இங்கு அவசியமாகின்றது.

அதாவது Bandwidth எனப்படுவது இணையத்தினூடான தரவுப்பரிமாற்றத்தில், இயலுமான ஆகக்கூடிய தரவுப்பரிமாற்ற வீதமாகும் (bandwidth is the maximum rate of data transfer across a given path)

அதாவது உதாரணமாக உங்களுடைய இணைய சேவை வழங்குனரால் Internet Service Provider or ISP), உங்களுடைய download speed 2 Mbps எனக்குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களுடைய internet connection ஆல் இணையத்தரவுகளை download செய்ய சாத்தியமான அதிகூடிய வீதம் எனலாம்.

எனினும் உண்மையில் குறிப்பிடப்பட்டுள்ள bandwidth இற்கு சமனான அல்லது நிகரான அளவில் தரவுகளை download அல்லது upload செய்வது பல்வேறு தடங்கல்களால் (latency, jitter, error rate and etc) சாத்தியமற்றது.

எனவே கிடைக்கின்ற உண்மையான தரவுப்பரிமாற்ற வீதம் throughput எனப்படும். ஆகவே, bandwidth யை விடவும் throughput எவ்வளவு என்பதிலேயே குறிப்பிட்ட ஒருவரின் சுமூகமான இணைய தரவுப்பரிமாற்றம் தங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ளல் அவசியமாகும்.

இப்பொழுது Zoom இணையத்தளத்தினால் பரிந்துரைக்கப்பட்ட Zoom meeting யினை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச bandwidth (அகலப்பட்டை) தேவைப்பாடுகள்.

இங்கு bandwidth எனப்படுவது, throughput யின் தேவைப்பாடு ஆகும்.

Bandwidth and Throughput Details
Bandwidth vs Throughput

1:1 (இருவருக்கிடையிலான) Video Calling க்கான தேவைகள்

  • High-Quality வீடியோவுக்கு   600 Kbps  (Up/Down)
  • 720p HD வீடியோவுக்கு 1.2 Mbps (Up/Down)
  • 1080p HD வீடியோவைப் பெற அல்லது அனுப்ப 1.8 Mbps (Up/Down) தேவைப்படுகிறது

குழு வீடியோ அழைப்புக்கு (Group Video Calling)

  • உயர்தர வீடியோவிற்கு 800kbps / 1.0Mbps (Up  / Down)
  • 720p HD வீடியோவுக்கு: 1.5 Mbps  (Up  / Down)
  • 1080p HD வீடியோவைப் பெறுவதற்கு 2.5Mbps (Up  / Down) தேவைப்படுகிறது
  • 1080p HD வீடியோவை அனுப்ப 3.0 Mbps  (Up  / Down) தேவைப்படுகிறது

Source: Zoom

மேலே குறிப்பிடப்பட்டவை தொழிநுட்ப ரீதியான தகவல்களாகும்.

இங்கும் மிக முக்கியமான ஒரு புரிதல் அவசியமாகின்றது.

Zoom போன்ற conferencing applications களை பயன்படுத்தும் போது, அது இரு வழி (both way) தொடர்பாடல் ஆகும். மாற்றமாக, Youtube போன்ற இணையத்தளத்திலே video ஒன்றை பார்க்கின்ற பொழுது அங்கு downloading என்ற தரவிறக்கம் மாத்திரமே நடைபெறுகிறது.

ஆனால், zoom போன்ற conferencing applications யில் நீங்கள் இணைந்திருக்கும்போது, குறித்த Conferencing யில் உள்ளவர்களுடைய வீடியோ மற்றும் ஆடியோ மற்றும் Slides களை எம்மால் பார்க்க முடியுமாக இருப்பது downloading என்ற வகையிலும், அதில் இணைந்திருக்கின்ற எமது வீடியோ மற்றும் ஆடியோவை ஏனையவர்கள் செவிமடுக்கக்கூடியதாக இருந்தால் அது uploading வகையிலும் அடங்கும். இங்கு data விரயமானது dual way ஊடான downloading + uploading = மொத்த data உபயோகம் (total data consumption) என்ற சமன்பாடாகும். அதாவது, ஒரே நேரத்தில் downloading ஊடாகவும், uploading ஊடாகவும் data விரயமாகின்றது.

தற்பொழுது, zoom இனை பயன்படுத்தும் போது எவ்வளவு data விரயமாகிறது என்று பார்ப்போம்.

1:1 (இருவருக்கிடையிலான) Video Calling க்கான தேவைகள்

QualityDownloadUploadTotal
High270 MB/hr.270 MB/hr.540 MB/hr.
720p540 MB/hr.540 MB/hr.1.08 GB/hr.
1080p810 MB/hr.810 MB/hr.1.62 GB/hr.
  • அதாவது ஒரு நிமிடத்திற்கு 9 MB  தொடக்கம் 27 MB வரையாகும்.

குழு வீடியோ அழைப்புக்கு (Group Video Calling)

QualityDownloadUploadTotal
High450 MB/hr.360 MB/hr.810 MB/hr.
720p675 MB/hr.675 MB/hr.1.35 GB/hr.
1080p1.2 GB/hr.1.2 GB/hr.2.4 GB/hr.
  • அதாவது ஒரு நிமிடத்திற்கு 13.5 MB  தொடக்கம் 40 MB வரையாகும்.

குறிப்பு:

  • Video Sharing யை விட Screen Sharing இற்கு குறைந்தளவான data விரயமாகும்.
  • நாம் இணைந்துகொள்கின்ற கருவி (Laptop, tab மற்றும் mobile) இனை பொறுத்து Zoom ஆனது சில optimization களை செய்து முடியுமான வகையில் ஒரு சுமூகமான conferencing அனுபவத்தை தர முயற்சிக்கும்.

எனினும் தற்காலத்தில் COVID19 காரணமாக கற்றல் நடவடிக்கைகள் Zoom போன்ற applications ஊடக இணையத்தில் இடம்பெறுவதனால், மாணவர்களும் பெற்றோர்களும், கல்வியியலாளர்களும் பின்வரும் விடயங்களை அவசியம் புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய சக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில், conference யில் உள்ள இன்னொருவரின் தவறால் உங்களின் data விரயமாகும்.

Zoom Meeting யில் data விரயத்தை எவ்வாறு தவிர்ப்பது

1) வீடியோ மற்றும் ஆடியோ ஆனது அவசியப்படும் போது மாத்திரம் on செய்யுங்கள்.

குறித்த Zoom ஊடான கற்றல் நடவடிக்கையானது உண்மையில் one way communication ஆக உள்ளபோது

அதாவது ஆசிரியர் கற்பிக்கின்ற பொழுது மாணவர்கள் செவிமடுக்கின்ற சந்தர்ப்பங்களே சாதாரணமாக காணப்படும்.

எனவே, ஆசிரியர் தவிர்ந்த ஏனைய அனைவரும் தங்களுடைய வீடியோ வை முழுமையாக off செய்திருப்பதை உறுதிப்படுத்தவும். அதேபோல, கேள்வியொன்றை கேற்பதற்கு அல்லது பதிலளிப்பதற்கு மாத்திரம் தற்காலிகமாக ஆடியோ on செய்து கதைத்துவிட்டு மீண்டும் off செய்து விடவும்.

Zoom turn off video and audio
Turning off Audio and Video in Zoom Conference when not required

அதேபோல், Zoom meeting ஒன்றை schedule செய்கின்றபொழுது பின்வரும் இரண்டு settings களையும் கீழே படத்தில் உள்ளவாறு தெரிவு செய்து zoom meeting ஒன்றை schedule செய்யவும். அவ்வாறு செய்வதனூடாக எமது meeting யில் இணைபவர்களுடைய வீடியோ மற்றும் ஆடியோவானது அவர்கள் இணைகின்றபொழுது off செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தலாம்.

Zoom Meeting Schedule Setting

அதேபோல, பின்வருமாறு எமது வீடியோ setting யில் HD video வை untick செய்வதனூடாக எமது தனிப்பட்ட data விரயத்தை குறைக்கலாம்.

Zoom Optimized Video Quality
Untick HD for Less Data Consumption in Zoom Meeting

2) உரிய நேரத்திற்கு ஆரம்பித்து உரிய நேரத்துக்கு நிறைவு செய்யுங்கள்

குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்காவிட்டால் அல்லது meeting ஐ தொடங்கிய பின்னர் ஏனையவர்கள் வரும்வரை காத்திருந்தால், அவ்வாறு காத்திருக்கின்ற ஒவ்வொரு நிமிடத்துக்கும் மேலேயுள்ளவாறு data விரயமாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

3) Uploading ஊடான data விரயத்தை முடியுமான வரை தவிருங்கள்

அதாவது மேலே குறிப்பிடப்பட்டது போல், எமது வீடியோ மற்றும் ஆடியோவை அவசியம் தவிர முழுமையாக off செய்வதினூடாக பெருமளவு data, uploading ஊடாக விரயமாவதை தவிர்க்கலாம்.

4) Host அல்லது விரிவுரையாற்றுகின்றவர், இடைவேளைகளில் போது அல்லது அவசியப்படாத போது வீடியோவையும் screen sharing யையும் off அல்லது stop செய்யவும்.

எனவே இவ்வாறான best practices களை அவசியம் கடைப்பிடிக்கின்றபொழுது 1 மணித்தியாலத்திற்கு, அண்ணளவாக 250 MB தொடக்கம் 350 MB வரையான data விரயமாகும். மேலும், zoom யில் நாம் பயன்படுத்துகின்ற features களின் அடிப்படையில் இதனைவிட குறைவாகவும், கூடுதலாகவும் data விரயமாகும்.

எனவே, பொறுப்புணர்வோடு zoom போன்ற conferencing applications களை பயன்படுத்தும் போது எமது data விரயத்தையும் ஏனையவர்களின் data விரயத்தையும் தவிர்க்கலாம். அதனூடாக பண விரயத்தை தவிர்க்கலாம்.

குறிப்பு: இங்கு கூறப்பட்ட விடயங்கள் யாவும் பொதுவாக தற்பொழுது அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற zoom, MS Teams, Zoho Meeting போன்ற எல்லா conferencing applications களுக்கும் பொருந்தும்.

ஆகவே, zoom applications அல்லது conferencing applications பயன்படுத்துகின்ற, குறிப்பாக கற்றல் நடவடிக்கைக்காக பயன்படுத்துகின்ற எல்லோரையும் இப்பதிவு சென்றடையும் வண்ணம் பகிரவும்.

கீழே காணப்படுகின்ற buttons களூடாக இலகுவாக சமூக வலைத்தளத்தில் பகிர முடியும்.

இப்பதிவானது மாணவர்களின் நன்மை கருதி, விரிவான technical discussions மற்றும் விதிவிலக்குகளை தவிர்த்து எழுதப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும், உங்களுடைய சந்தேகங்களை அல்லது மேலதிக விபரங்களை comments யில் கேற்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here