13 Interesting facts about WhatsApp

Table of Contents

WhatsApp பற்றிய 13 ஆச்சரியமான உண்மைகள்

1. WhatsApp யை பயன்படுத்துபவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 23 தடவைகள் WhatsApp யை open செய்கின்றார்கள்.

WhatsApp யின் புள்ளிவிபரங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சராசரியாக WhatsApp பயனர்கள் ஒரு நாளைக்கு 23 முறை அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் WhatsApp யை Open செய்கின்றார்கள். அதாவது, உறங்குகின்ற நேரத்தை கழித்தால், WhatsApp பயனர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அதனை திறக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது.

2. WhatsApp ஆனது WhatsApp யை சந்தைப்படுத்துவதற்காக எந்தவொரு பணத்தையும் செலவழிக்கவில்லை.

WhatsApp நிறுவனர்களான Jan Koun மற்றும் Brian Acton ஆகியோர் விளம்பரங்களை கடுமையாக புறக்கணிதார்கள். அதனால் அவர்கள் WhatsApp யின் தொடக்கத்திலிருந்து விளம்பரத்தில் சிறு தொகைப்பணத்தையேனும் முதலீடு செய்யவில்லை. அதேபோல் அவர்களிடம் சந்தைப்படுத்தல் ஊழியர்களும் காணப்படவில்லை. WhatsApp ஆனது மாற்றமாக WhatsApp யை பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெறுமாதியான ஒரு app யை வழங்குவதையே அதன் மூலோபாயமாக கொண்டிருந்தது மற்றும் அதிலேயே முதலீடு செய்துள்ளது.

3. ஒவ்வொரு நிமிடமும் WhatsApp யில் 29 மில்லியனுக்கும் அதிகமான செய்திகள் அனுப்பப்படுகின்றன.

இது text ஆக மாத்திரம் பகிரப்படுகின்ற தகவல்களாகும். இங்கு images, Videos மற்றும் Audio பதிவுகள் உள்ளடங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

4. WhatsApp யை 10 Billion USD இற்கு வாங்குவதற்கு Google முன்வந்தது.

எனினும் அதன் நிறுவனர்கள் WhatsApp யின் மதிப்பை அறிந்திருந்தனர். அதனால் 2014 ஆம் ஆண்டில் 10 பில்லியன் USD அமெரிக்க டாலர்களுக்கான கூகிளின் offer யினை நிராகரிக்கச் செய்தது. பின்னர், Facebook ஆனது சுமார் இரு மடங்கு பெறுமதிக்கு (19 Billion USD) WhatsApp யை கொள்வனவு செய்தது. WhatsApp யின் தற்போதைய மதிப்பு சுமார் 50 billion அமெரிக்க டாலர்களாகும்.

5. WhatsApp யின் பிரதம நிறைவேற்று அதிகாரி Jan Koun 2015 யில் கோடீஸ்வரரானார்.


WhatsApp பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் நிறுவனர்களில் ஒருவருமான Jan Koun தனது கனவுகளை அடையும் நோக்கில் கல்லூரிப்படிப்பை இடையில் கைவிட்டார். பின்னர் Yahoo நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், தனது நண்பருடன் சேர்ந்து App Development project களை செயற்படுத்தினார். தற்போதைய அவரது சொத்து மதிப்பு சுமார் 10.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2014 யில் அவர் தனது முதலாவது 1 Billion USD யை சம்பாதித்து கோடீஸ்வரர்களில் ஒருவரானார் (அதாவது சுமார் 200 கோடி இலங்கை ரூபாய்)

6. WhatsApp ஆனது உலகில் அதிகம் Download செய்யப்பட்ட மூன்றாவது Android Application ஆகும்.

Google Playstore யில், Facebook மற்றும் Youtube apps களுக்கு அடுத்தபடியாக அதிகம் download செய்யப்பட்ட App ஆக WhatsApp காணப்படுகின்றது. App Store யைப்பொறுத்தவரை அதிகம் download செய்யப்பட்ட முதலாவது App ஆக காணப்படுகின்றது. WhatsApp ஆனது இன்றைய திகதியில் 5 Billion அதாவது 500 கோடிக்கு அதிகமாக download செய்யப்பட்டுள்ளது

WhatsApp Image 2021 07 15 at 1.16.03 PM
Number of WhatsApp Installs in Playstore

7. 2013 இல் WhatsApp voice messaging வசதியையும் றிமுகப்படுத்தியது

ஆரம்பத்தில் voice messaging அம்சத்தை WhatsApp வழங்கவில்லை. பின்னர் App யின் பயன்பாட்டின் பெறுமதியை அதிகரிக்க voice message அனுப்பும் அம்சத்தைச் சேர்க்க 2013 ஆம் ஆண்டில் நிறுவனம் முடிவு செய்தது. இது உலகில் எங்கிருப்பவருடனும் மிக குறைந்த செலவில் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பெரும் பங்காற்றியது.

8. WhatsApp ஆனது 60 வேறுபட்ட மொழிகளில் கிடைக்கின்றது.

சுமார் 60 வெவ்வேறுபட்ட மொழிகளில் WhatsApp யை நிறுவி பயன்படுத்தலாம்.

9. WhatsApp யினுடைய பெறுமதியானது சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக காணப்படுகின்றது.

WhatsApp யின் நிகர மதிப்பு பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா? வளர்ந்துவரும் சில நாடுகளைவிட மட்டுமல்ல. ஆச்சரியப்படும் விதமாக, சில அபிவிருத்தியடைந்த நாடுகளின் உள்நாட்டு உட்பத்திகளைவிட இதன் பெறுமதி அதிகம் என்பது உண்மையில் ஆச்சரியம் தான்.

10. சராசரியாக ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் புதிய பயன்பாட்டாளர்கள் WhatsApp யில் இணைகின்றார்கள்

11. Brazil, India and turkey ஆகிய நாடுகளிலேயே அதிக பயனர்கள் காணப்படுகின்றார்கள்.

12. சராசரியாக ஒரு நாளைக்கு 65 billion text messages, WhatsApp ஊடக பகிரப்படுகின்றது.

13. 1 billion க்கும் அதிகமான active groups கள் WhatsApp யில் காணப்படுகின்றது.

ஒவ்வொரு Group யிலும் குறைந்த பட்சம் 6 அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர்.

குறிப்பு: இத்தகவல்கள் யாவும், இணையத்தில் காணப்படுகின்ற பல website களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. மாற்றத்திற்கு இடமுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here